முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Bakthip padalgal லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழம் நீ அப்பா! ஞானப் பழம் நீ அப்பா!

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நான் உண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் உனக்கு என்ன விதம் இக்கனியை நாம் ஈவது என்று நாணித் தான் அப்பனித்தலையர் தரவில்லை! ஆதலால் முருகா உனக்குச் சாரும் ஒரு பிழையில்லையே!(3) சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் சண்முகா உனக்கு குறையுமுளதோ?(5) முருகா நீ ஏன் இப்படிக் கோவணத்தோடும் தண்டு கொண்டு இங்குற்றோ ஆண்டியானாய்? எமது வினைபொடிபடவும் அல்லவோ நீ இப்படி இங்கு இருக்கலாம்? என் ஆசான், அப்பன், அன்னையாம் என்னவும் எண்ணினேன் தருமையரு பழனி மலையில் சந்ததம் குடிகொண்ட சங்கரன் கும்பிடும் என் தண்டபாணித் தெய்வமே! பழம் நீ அப்பா! ஞானப் பழம் நீ அப்பா! தமிழ் ஞானப் பழம் நீ அப்பா! திருச் சபை தன்னில் உருவாகிப் புலவோர்க்குப் பொருள் கூறும் பழனியப்பா! ஞானப் பழம் நீ அப்பா! தமிழ் ஞானப் பழம் நீ அப்பா! நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்! ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்! திருக் கார்த்திகைப் பெண் பால் உண்டாய்! உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீ அப்பா! ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு! நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்...