முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Sollathan ninaikiren song - Movie - Sollathan Ninaikiren





சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்

காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே (2)
மன வீடு அவன்  தனி வீடு அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ
அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே

சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்

காதல் என்பது மழையானால் அவள்  கண்கள்தானே  கார்மேகம்(2)
நீராட்ட நான் பாராட்ட அவள் வருவாளோ இல்லை மறப்பாளோ
அவள் வருவாளே சுகம் தருவாளே

ஹாஹா சொல்லத்தான் நினைக்கிறேன்

ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே(2)
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம்
அவன் அணை ப்பானோ என்னை நினைப்பானோ
அவன் அணைப்பானே என்னை நினைப்பானே

நேரில் நின்றாள்  ஓவியமாய் என் நெஞ்சில் நின்றாள்  காவியமாய்(2)
நான் பாதிஅவள்தான் பாதி எனக் கலந்தாளோ கன்னி மலர்ந்தாளோ
நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே

ஹாஹாசொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்

ஹாஹா...........................

கருத்துகள்