உன்னைக் கண்டபின்புதான் என்னைக் கண்டு கொண்டேன்
உன்கண்ணைக் கண்டபின்புதான் காதல் கண்டு கொண்டேன்(2)
நேற்றுமுதல் புத்திமாறி பேதலிக்கிறேன் நானும்
நிறைகுடைத்தை வைத்துக் கொண்டு நீரிறைக்கிறேன்
பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன் இன்று
பால் குடித்த பின்புதானே பல் துலக்கினேன்
உன்னைக் கண்டபின்புதான் என்னைக் கண்டு கொண்டேன்
உன்கண்ணைக் கண்டபின்புதான் காதல் கண்டு கொண்டேன்(2)
புடவையோடு விரலை சேர்த்து தைத்துக்கொள்கிறேன் ..சாந்து
பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்துக் கொள்கிறேன்
தனிமையோடு சத்தமாக பேசிக் கொள்கிறேன் ..ஒரு
சபை நிறைந்த வேளையிலே மௌனமாகிறேன்
உன்னைக் கண்டபின்புதான் என்னைக் கண்டு கொண்டேன்
உன்கண்ணைக் கண்டபின்புதான் காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்
கருத்துகள்
கருத்துரையிடுக