என்மேல் விழுந்த மழைத்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே.
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.(2)
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர்போல்
உனக்குள் தானே நானிருந்தேன்...........
மண்ணைத் திறந்தால் நிரிருக்கும்
என் மனதைத் திறந்தால் நீயிருப்பாய்
ஒலியைத் திறந்தால் இசையிருக்கும்
என் உயிரைத்திறந்தால் நீயிருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதைத் திறந்தால் நீயிருப்பாய்
இரவைத் திறந்தால் பகல் இருக்கும்
என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய்
என்மேல் விழுந்த மழைத்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே.
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.
இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ?
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ?...
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ?
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆகிடுமோ?
என்மேல் விழுந்த மழைத்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே.
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர்போல்
உனக்குள் தானே நானிருந்தேன்...........
என்மேல் விழுந்த மழைத்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே.
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.
கருத்துகள்
கருத்துரையிடுக