நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா.
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா........
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா.
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா........
உயிரே....விலகத் தெரியாதா........
மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா.
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா.....
உயிரே....விலகத் தெரியாதா........
எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்கத் தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே உனக்குமறையத் தெரியாதா
பனியே .....மறையத் தெரியாதா?
கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்தஇறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைத் தெரியாதா
உனக்கு என்னைத் புரியாதா
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா.
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா........
உயிரே....விலகத் தெரியாதா........
கருத்துகள்
கருத்துரையிடுக