நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும்
தேனாறு போல பொங்கி வர வேண்டும்வர வேண்டும்
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும்
தேனாறு போல பொங்கி வர வேண்டும்
அங்கம் தழுவும்வண்ண தங்க நகை போல் என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன
வார்த்தை சொல்ல மொழி வேண்டும்மொழி வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன
வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின் ன முகத்தில்
மொழிகள் பாடம் சொல்ல வர வேண்டும்
பல மொழிகள் பாடம் சொல்ல வர வேண்டும்
ம்ம்ம் மௌனமே பார்வையால்........
கருத்துகள்
கருத்துரையிடுக