உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
ஒலகமே சொழலுதே ஒன்னப்பாத்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெக்கம் ஒடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்சநாளா.
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
ஒலகமே சொழலுதே ஒன்னப்பாத்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெக்கம் ஒடையுதே முத்தம் தொடருதே
உருகுதே மருகுதே ஒரேபார்வையாலே
சொக்கித்தானே போகிறேனே நானும்கொஞ்சநாளா.
ஏய் அம்புலியில் நனைந்து சந்திக்கிற போது
அன்புக் கத பேசிப்பேசி விடியுது இரவு
ஏழு கடல் தாண்டித்தான் ஏழு மல தாண்டித்தான்
எங்கருத்த மச்சான்கிட்ட ஓடிவரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப்பாக்குறேன்
காட்சி யாவும் நெசமா மாற கூட்டிப்போகுறேன்
சாமிபார்த்து கும்பிடும்போதும் நீதானே நெஞ்சில் இருக்க
ஊரவிட்டு எங்கயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலேதான்வாழுறேன்
கூரப்பட்டு சேல தானே வாங்கித்தர கேட்குறேன்
கூடுவிட்டு கூடுபாய காதலாலே சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவற கேட்டு உன்ன சொமக்கவா......
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா.
ஓஓ.. மையிட்ட கண்ணே உன்ன மறந்தா இறந்தே போவேன்..
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
ஒலகமே சொழலுதே ஒன்னப்பாத்ததாலே
சொக்கித்தானே போகிறேனே நானும்கொஞ்சநாளா.
கருத்துகள்
கருத்துரையிடுக