மலரே மௌனமா... மௌனமே வேதமா.........
மலர்கள் பேசுமா........ பேசினால் ஓயுமா அன்பே...
(மலரே)
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ.
மீதி ஜீவன் உன்னைப் பார்த்தபோது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூருதே ஏனோ மனம் தள்ளாடுதே(2)
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா.
(மலரே)
கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்ல திறந்தேன்
காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவை என்னை தள்ளாதிரு(2)
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளலே..
(மலரே)
கருத்துகள்
கருத்துரையிடுக