பெண்:
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம் ம்ம்ஆண்:
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும் ம்ம் ம்ம்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும் ம்ம் ம்ம்
இருவரும்:
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம் ம்ம்பெண்:
பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் ம் ம்ம்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் ம் ம்ம்
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ம் ம்ம்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம் ம்ம்
பெண்:
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே ம்ம் ம்ம்
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை ம்ம் ம்ம்
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம் ம்ம ம்ம்
கருத்துகள்
கருத்துரையிடுக