அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதேபெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதேஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
அன்பே அன்பே கொல்லாதேகண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்அடடா பிரம்மன் கஞ்சனடிசற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்ஆஹா அவனே வள்ளலடிமின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்துரவிவர்மன் எழுதிய வதனமடிநூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்சிற்பிகள் செதுக்கிய உருவமடிஇதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்நீதான் நீதான் அழகியடிஇத்தனை அழகும் மொத்தம் சேர்ந்துஎன்னை வதைப்பது கொடுமையடி
அன்பே அன்பே கொல்லாதேகண்ணே கண்ணை கிள்ளாதே
கொடுத்து வைத்தப் பூவே பூவேஅவள் கூந்தல் மணம் சொல்வாயாகொடுத்து வைத்த நதியே நதியேஅவள் குளித்தச் சுகம் சொல்வாயாகொடுத்து வைத்த கொலுசேகால் அழகைச் சொல்வாயாகொடுத்து வைத்த மணியேமார் அழகைச் சொல்வாயா
அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பிஅங்கே உனக்கொரு வீடு செய்வேன்உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டுஉயிருக்கு உயிரால் உறையிடுவேன்
மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்துமெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போதுநட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்பால் வண்ணப் பறவை குளிப்பதற்காகபனித்துளி எல்லாம் சேகரிப்பேன்தேவதை குளித்த துளிகளை அள்ளித்தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
அன்பே அன்பே கொல்லாதே
அன்பே அன்பே கொல்லாதேகண்ணே கண்ணை கிள்ளாதேபெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதேஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
அன்பே அன்பே கொல்லாதேகண்ணே கண்ணை கிள்ளாதே
கருத்துகள்
கருத்துரையிடுக