நிலாவே வா செல்லாதே வா
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேனே!
நிலாவே வா செல்லாதே வா
காவேரியா கானல் நீரா பெண்மை என்ன உண்மை
முள் வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீதா...ன் இன்னும் சிறு பிள்ளை....
தங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை
நிலாவே வா செல்லாதே வா
பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வா..ட சந்தம் பா...ட
கூடாதென்று கூறும் பூ...வும் ஏது மண்ணின் மீ....து
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மா...னே
ஆகாயம் ஆகாத மேகம் ஏது கண்ணே...
நிலாவே வா செல்லாதே வா
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேனே
நிலாவே வா செல்லாதே வா
என்னாளும் உன் பொன்வானம் நான்
கருத்துகள்
கருத்துரையிடுக