ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே..
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே.....
ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே
அதே பேரில்என்பெயர் சேர்க்கின்றதே
வினாத்தாளில் வெற்றிடம் திண்டாடுதே
காதல்! கேட்கும்! கேள்வியா?
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே..
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே.....
நதியில் விழும் இலை இந்த காதலா?
கரையைத்தொட இத்தனை மோதலா?
விழுந்தது நானா?
எழுந்திடுவேனா?
எழுந்திடும்போதும்
விழுந்திடுவேனா?
உன்னைப்பார்த்ததைநானறியேன்
உன்னைப்பார்க்கிறேன் வேறறியேன்
என்னுடன் நீயா?
உன்னுடன் நானா?
நானே நீயா?
நீயே நானா?
இது என்ன ஆனந்தமோ
தினம் தினம் சுகம் சுகம்
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே..
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே.....
எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
அதுதான் உன்னை என்னிடம் சேர்த்தது.
தொலைந்தது நானா...
கிடைத்திடுவேனா?
கிடைத்திடும்போதும்
தொலைந்திடுவேனா?
பெண்கள் மனம் ஒரு ஊஞ்சலில்லை.......
ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை
இழுப்பது நீயா
வருவது நானா
திசையறியாது திரும்பிடுவேனா
காதல் ஊஞ்சலில் அசைவதே சுகம் சுகம்
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுதே..
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே.....
கருத்துகள்
கருத்துரையிடுக