பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
அணைத்தேன் அழகினை ரசித்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்
இல்லாதபடி கதை முடித்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… இரு கரை மீதிலே தன் நிலைமீறியே… ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே… ஓ… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… வெண்பனி போலே கண்களில் ஆடும்… மல்லிகை தோட்டம் கண்டேன்… அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை… வெண்பனி போலே கண்களில் ஆடும்… மல்லிகை தோட்டம் கண்டேன்… அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை… அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… மின்னலை தேடும் தாழம்பூவே… உன் எழில் மின்னல் நானே… பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே… ஆஹாஹா… மின்னலை தேடும் தாழம்பூவே… உன் எழில் மின்னல் நானே… பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே… உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காகதானே… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி… ஊர்வலம் போகும் வேளை… நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்… அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி… ஊர்வலம் போகும் வேளை… நி...
கருத்துகள்
கருத்துரையிடுக