திரைப்படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்
குரல்: சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரேசொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
இன்னொரு கைகளிலே யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரேசொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே
இன்றுசொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவாசொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா -- தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா.. இந்த இரண்டு வரிகளே போதும்... அத்தனையும் தெளிவாக புரிந்துவிடும்... இதைவிட ஒரு அழகாக கற்பின் மாண்பினை சொல்லிவிடமுடியாது. நல்லதொரு பாடலை மீண்டுமொருமுறை தாங்கள் பதிவிட்டதற்கு என் மனப்பூர்வமான நன்றி கோமதி அவர்களே.. நான் ரசிக்கும் பாடலில் இதுவும் ஒன்று...
பதிலளிநீக்கு