ஆண்:
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்
ஆஆ சொல்லத்தான் நினைக்கிறேன்
பெண்:
காற்றில் மிதக்கும் புகைபோலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளேஏஏ
காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கம் நினைவுகளே
மன வீடு அவன் தனி வீடு
அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ
அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே
ஆஆ...சொல்லத்தான் நினைக்கிறேன்..
உள்ளத்தால் துடிக்கிறேன்..
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்
ஆண்:
காதல் என்பது மழையானால் அவள்
கண்கள்தானே கார் மேகம்
காதல் என்பது மழையானால் அதில்
கண்கள்தானே கார் மேகம்
நீராட்ட எனைப்பாராட்ட அவள்
வருவாளோ இல்லை மறப்பாளோ அவள்
வருவாளே...சுகம் தருவாளே
ஆஆ.. சொல்லத்தான் நினைக்கிறேன்
பெண்:
ஆசை பொங்குது பால் போலே அவன்
அனல் போல் பார்க்கும் பார்வையிலே..
ஆசை பொங்குது பால் போலே அவன்
அனல் போல் பார்க்கும் பார்வையிலே..
கொதித்தமனம் கொஞ்சம் குளிரும் விதம்
அவன் அணைப்பானோ என்னை நினைப்பானோ
அவன் அணைப்பானே என்னை நினைப்பானே
ஓஓ.....
ஆண்:
நேரில் நின்றாள் ஓவியமாய் என்
நெஞ்சில் நின்றாள் காவியமாய்
நேரில் நின்றாள் ஓவியமாய் என்
நெஞ்சில் நின்றாள் காவியமாய்
நான் பாதி அவள்தான் பாதி எனக் கலந்தாளோ
கண்ணில் மலர்ந்தாளோ
என்னில் கலந்தாளோ கண்ணில் மலர்ந்தாளோ
ஆஆ சொல்லத்தான் நினைக்கிறேன்(ஆ)
உள்ளத்தால் துடிக்கிறேன்(பெ)
வாயிருந்தும் (ஆ)
சொல்வதற்கு(பெ)
வார்த்தையின்றி தவிக்கிறேன்..(ஆ,பெ)
ஆ ஆ....
கருத்துகள்
கருத்துரையிடுக