பெண்:
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு
ஆண்:
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு
பெண்:
தூங்காத கண்ணென்று ஒன்று
ஆண்:
முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதையொன்று நீ பேச
முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதையொன்று நீ பேச
பெண்:
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவையென்று ஒன்று
ஆண்:
தூங்காத கண்ணென்று ஒன்று
பெண:
யார் என்ன சொன்னாலும் நில்லாது
அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது
யார் என்ன சொன்னாலும் நில்லாது
அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது
ஆண்:
தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி
நாம் காணும் உலகென்று ஒன்று
தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி
நாம் காணும் உலகென்று ஒன்று
பெண்:
தூங்காத கண்ணென்று ஒன்று
ஆண்:
வெகுதூரம் நீ சென்றஉ நின்றாலும் உன்
விழி மட்டும் தனியாக வந்தாலும்
வெகுதூரம் நீ சென்றஉ நின்றாலும் உன்
விழி மட்டும் தனியாக வந்தாலும்
பெண்:
வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று
வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று
ஆண்:
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு
தூங்காத கண்ணென்று ஒன்று
கருத்துகள்
கருத்துரையிடுக