முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேள்வியின் நாயகனே




கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்
எல்லோரும் பார்க்கின்றோம்

கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?

பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று
பாலருந்தும்போதா காளை வரும்?
சிலரது வாத்தியத்தில் இரண்டு சத்தம் - அந்த
இன்னிசையால் உனக்கு பிறக்கும் வெட்கம்
தாலிக்கு மேலொரு தாலி உண்டா?
வேலிக்குள்ளே ஒருவன் வேலி உண்டா?
கதை எப்படி? அதன் முடிவெப்படி?

கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?

தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை
தரும தரிசனத்தை தேடுகிறான்
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?
செல்வாளோ? செல்வாளோ?

கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?

ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
பார்த்துக்கொண்டால்...அவை
ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை
இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன?
பேதம் மறைந்ததின்று கோவில் கண்ணே
நமது வேதம் தனை மணந்து நடக்கும் முன்னே
கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன?
உடல் எப்படி?
முன்பு இருந்தாற்படி...
மனம் எப்படி?
நீ விரும்பும்படி...

கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
ஒரு கண்ணும்

பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்திரு முருகா
திருமுருகா...திருமுருகா...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…

 செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… இரு கரை மீதிலே தன் நிலைமீறியே… ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே… ஓ… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… வெண்பனி போலே கண்களில் ஆடும்… மல்லிகை தோட்டம் கண்டேன்… அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை… வெண்பனி போலே கண்களில் ஆடும்… மல்லிகை தோட்டம் கண்டேன்… அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை… அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… மின்னலை தேடும் தாழம்பூவே… உன் எழில் மின்னல் நானே… பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே… ஆஹாஹா… மின்னலை தேடும் தாழம்பூவே… உன் எழில் மின்னல் நானே… பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே… உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காகதானே…  செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி… ஊர்வலம் போகும் வேளை… நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்… அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி… ஊர்வலம் போகும் வேளை… நி...

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

  பெண்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  ஆண்: நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும் ம்ம் ம்ம் நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும் ம்ம் ம்ம்  இருவரும்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  பெண்: பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும் பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும் மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் ம் ம்ம் மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் ம்  ம்ம் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ம்  ம்ம்  நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  பெண்:  சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை ...

என்மேல் விழுந்த மழைத்துளியே

என்மேல் விழுந்த மழைத்துளியே  இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.(2) என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் உடம்பில் உறைகின்ற ஓருயிர்போல் உனக்குள் தானே நானிருந்தேன்...........   மண்ணைத் திறந்தால் நிரிருக்கும் என் மனதைத் திறந்தால் நீயிருப்பாய் ஒலியைத் திறந்தால் இசையிருக்கும் என் உயிரைத்திறந்தால் நீயிருப்பாய் வானம் திறந்தால் மழை இருக்கும்  என் வயதைத் திறந்தால் நீயிருப்பாய் இரவைத் திறந்தால் பகல் இருக்கும் என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய் என்மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாளாய் எங்கிருந்தாய். இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ? அலையும் கரையும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ?... மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ? பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால் பாஷை ஊமை ஆகிடுமோ? என்மேல் விழுந்த மழைத்துளியே  இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாள...